மகரந்தச் சேர்க்கை
பூவின் மகரந்தத்தாளில் உள்ள மகரந்தத் துகள்கள் சூழ்முடியை சென்றடைவதையே மகரந்தச் சேர்க்கை என்கிறோம்.
பூ என்பது மலரும் தாவரங்களில் காணப்படும் இனப்பெருக்க அமைப்பு ஆகும். மலர்கள், தாவரங்களின் இனப்பெருக்க உறுப்புகளைக் கொண்டுள்ளன. மலர்களின் பணி விதைகளை உருவாக்குவது ஆகும். விதைகளே அடுத்த தலைமுறையை உருவாக்குகின்றன. தாவரங்களின் மலர்கள் இனப்பெருக்க அமைப்பாக இருப்பதுடன் அவற்றின் மணம், அழகு ஆகியவற்றுக்காக பன்னெடுங்காலமாக மனிதர்களால் விரும்பி வளர்க்கப்பட்டு வருகின்றன.
ஒரு பூவின் ஆண் பகுதி மகரந்தம் எனவும், பூவின் பெண் பகுதி சூலகம் எனவும் அழக்கப்படுகிறது. மகரந்த பையில் மகரந்தத்துகள்கள் உள்ளன. அதேபோல சூலகத்தில் சூல்முடி, சூல் தண்டு, சூல் பை உள்ளன. இந்த சூல் பையில்தான் சூல்கள் உள்ளன.
மகரந்தர்ப்பையிலுள்ள மகரந்தத்துகள் சூல்முடியை சென்றடைகின்றன.அதனால் சூலகத்தில் கருவுறுதல் நடைபெறுகிறது. பின்னர் சூல்பை கனியாக மாறுகிறது சூல்கள் விதைகளாக மாறி அதனுள் புதைந்திருக்கும்.
ஒரு பூவின் மகரந்தத் துகள்கள் அதே பூவின் சுருள் முடியை சென்று அடைவதைத் தன் மகரந்தச் சேர்க்கை என்கிறோம்.
ஒரு பூவின் மகரந்தத் துகள்கள் அதே இனத்தைச் சார்ந்த மற்றொரு தாவரத்தின் சூல் முடியைச் சென்றடைவதை அயல் மகரந்தச் சேர்க்கை என்கிறோம்.
ஒரு பூவில் உள்ள மகரந்த துகள்கள் மற்றொரு பூவிற்கு செல்ல வண்டுகள், வண்ணத்துப் பூச்சிகள், தேனீக்கள் முதலிய சிறு பூச்சிகள் உதவுகின்றன .இவை
பூக்களின் மீது வந்து அமரும் போது அதன் மீது மகரந்தத் துகள்கள் ஒட்டிக்கொள்கின்றன. அதனைத் தொடர்ந்து மற்ற பூக்களின் மீது சென்று அமரும்பொழுது அந்தப் பூவில் உள்ள சூல்முடியை மகரந்தத்துகள்கள் சென்றடைவதன் மூலமாக மகரந்த சேர்க்கை நடைபெறுகிறது. அதுமட்டுமல்லாமல் காற்றின் மூலமாகவும் மகரந்த சேர்க்கை நடைபெறுகின்றன.
0 Comments