தேசியப் பாடல்

இந்திய தேசிய சின்னங்கள் - தேசிய பாடல்

தேசிய பாடல்



தேசிய கீதத்தை விட வந்தே மாதரம் எனத் தொடங்கும் தேசியப்பாடல் பழமையானது. 1882 ல் பங்கிம் சந்திரனின் ”ஆனந்த மட்” நூல் வெளியானது. எனவே இதற்கு முன்பே இது எழுதப்பட்டிருக்க வேண்டும்.1896 ல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் இது முதன்முதலாகப் பாடப்பட்டது. இதற்கு இசையமைத்தவர் இரவீந்திர நாத் தாகூர்.|- தேசியப் பாடலின் ஸ்ரீஅரவிந்தரின் ஆங்கில மொழிப்பெயர்ப்பின் தமிழ் பொருள். “ அம்மா நான் வணங்குகிறேன். இனிய நீர்ப் பெருக்கினை, இன் கனி வளத்தினை, தனி நறுமலயத் தண்காற் சிறப்பினை, பைந்நிறப் படினம் பரவிய வடிவினை வணங்குகிறேன். வெண்ணிலாக் கதிர் மகிழ்விரித்திடும் இரவின் மலர் மணிப் பூந்திகழ் மரன் பல செறிந்தனை, குறுநகையின் செலார் குலவிய மாண்பினை , நல்குவை இன்பம், வரம் பல நல்குவை அம்மா வணங்குகிறேன். ”

Post a Comment

0 Comments