தமிழ்

மனித இனம் கண்டறிந்த சிறந்த கண்டுபிடிப்பு மொழி. மனிதரைப் பிற உயிரினங்களிடம் இருந்து வேறுபடுத்தியும் மேம்படுத்தியும் காட்டுவது மொழி. மொழி, நாம் சிந்திக்க உதவுகிறது. சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுகிறது. பிறர் கருத்தை நாம் அறிய உதவுவதும் மொழியே. உலகில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. இவற்றுள் சில மொழிகள் மட்டுமே பேச்சு வடிவம், எழுத்து வடிவம் இரண்டையும் பெற்றுள்ளன. உலக மொழிகள் பலவற்றுள் இலக்கண, இலக்கியவளம் பெற்றுத் திகழும் மொழிகள். மிகச்சிலவே. அவற்றுள் செம்மை மிக்க மொழி என ஏற்றுக் கொள்ளப்ப ட்டவை சில மொழிகளே! தமிழ்மொழி அத்தகு சிறப்பு மிக்க செம்மொழியாகும். தமிழுக்கு முத்தமிழ் எனனும் சி்றப்புப் பெயரும் உணடு. இயல்தமிழ் எண்ணத்தை வெளிப்படுத்தும்; இசைத்தமிழ் உள்ளத்தை மகிழ்விக்கும்; நாடகத்தமிழ் உணர்வில் கலந்து வாழ்வை நல்வழிப்படுத்தும். இலக்கியம் தோன்றிய பிறகே அதற்குரிய இலக்கண விதிகள் தோன்றியிருக்க வேண்டும். தொல்காப்பியம் தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமைான நூல் ஆகும். அப்படி என்றால் அதற்கும் முனனதாகவே தமிழில் இலக்கிய நூல்கள் இருந்திருக்க வேண்டும் அல்லவா? இதனைக்கொணடு தமிழ் மிகவும் தொன்மைான மொழி எனபதை உணரலாம்.

Post a Comment

0 Comments